Tuesday, October 9, 2012

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல்
திருநாகேச்வரம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. பத்துக்கு மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்க பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். நோய் வந்தவுடன் தவிப்பதை விட தவிர்ப்பது மேல். விட்டு விட்டு காய்ச்சல் வந்தால் அலட்சியப் படுத்தாமல் அருகில் இருக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஆரம்ப அறிகுறிகள் இருக்கும்போதே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது.             அலட்சியம் வேண்டாம்.

செய்ய வேண்டியது.
௧. மழைநீர் தேங்காத சுற்றுபுறம்.
௨. கொசுக்களிடமிருந்து பாதுகாப்பு.

௩. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை அணுகுதல்.

Tuesday, March 20, 2012

 போதிமரம்

போதிமரம் மட்டுமே
புத்தனாக போதுமெனில்,
எத்தனை போதிமரமோ
அத்தனை புத்தன்கள்.

Tuesday, January 3, 2012

human anatomy and physiology. in tamil

மனித உடல் பல அற்புதங்களை கொண்டது. "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்" என்றார் திருமூலர். உடல் பாகங்களையும், அவை செயல் படும் விதங்களையும் தமிழில் எழுத வேண்டும் என்ற பேராவல் காரணமாக இந்த கட்டுரையை துவங்குகிறேன்.பிழையிருந்தால் மன்னிக்க.

உடலியல்
உடலியல் என்பது நம் உடல் உறுப்புகள் பற்றி விரிவாக எடுத்து கூறுவது ஆகும்.உடல் உறுப்புகளையும் அதன் பாகங்களையும் பற்றிய அறிவியல் ஆகும்.

உடல் செயலியல்  
உடல் செயலியல் உடலில் உள்ள உறுப்புகள் செயல்படும் விதங்களை பற்றிய அறிவியல் .


Thursday, September 22, 2011

arasiyal

மக்கள் நலனை அடிப்படையாக கொண்ட ஒரு கட்சி .மக்களை முன்னேற்றக்கூடிய ஒரு கொள்கை. அந்தக் கொள்கைக்காக போராடக்கூடிய ஒரு தலைவன். தலைவனின் பின்னால் நிற்கும் தொண்டர்கள்.

Wednesday, August 3, 2011

இரத்தம்

இரத்தத்தைக் கண்டு அழுதான் 
கசாப்புக் கடைக்காரன்.
மகளுக்கு காயம்.

Monday, June 20, 2011

பெண்

பெண்கள் காதலிக்கும்போது ஆண்கள் நல்லவனாகவும், திருமணத்திற்கு பிறகு வல்லவனாகவும் இருக்க ஆசைப்படுகிறார்கள்.

Friday, May 20, 2011

சாலைகள் கால்நடைகளுக்கா?

சாலைகள் கால்னடைகளுக்காகவா இல்லை வாகனங்களுக்காகவா என்பது தெரியவில்லை?