Saturday, August 21, 2010
சென்னைப்பட்டினம்
http://www.dinamalar.com/madrasday/இன்டெக்ஸ் என்ற வலைதளத்தில் பழைய சென்னையைப்பற்றிய அறிய தகவல்களும் புகைப்படங்களும் இடம் பெற்று இருக்கின்றன. பழைய சென்னையில் இருந்த அடர்ந்த மரங்கள் காலப்போக்கில் காலாவதியாகி விட்டன. இப்போது இருப்பதெல்லாம் கான்க்ரீட் மரங்கள்தான்.
Monday, August 9, 2010
குயிலோசை
நீண்ட நாட்களுக்கு பிறகு குயிலின் கீதத்தை கேட்டேன். வீட்டின் பின்புறம் அமர்ந்திருந்த போது மெல்லிசையாக ஒலிக்க ஆரம்பித்தது. வயல்களைஎல்லாம் அழித்து மனைகளாக்கி மாற்றி, மரங்களை எல்லாம் அழித்து பின்பு குயிலின் குரல் கேட்பது என்பது அதிசய நிகழ்வு ஆகிவிட்டது. " வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர்" என்பார் பாரதியார் குயில் பாட்டில். வெயில் நுழைய முடியாத அடர்த்தியான தோட்டங்கள் எல்லாம் அழிந்தபின் குயில் எங்கு நுழையும்.
தொடர்ந்து ரசிக்க முடியாவண்ணம் செய்ய வேண்டிய வேலைப்பளு நினைவை வந்து அழுத்த எழுந்து வர வேண்டியவனாகிவிட்டேன்.
ரசிக்க இயற்கை அழைத்தாலும் கடமை பணியாற்ற அழைக்கும் போது என் செய்வது stopping by woods in the snowy evening கவிதையை நினைத்துக் கொண்டேன். http://www.ketzle.com/frost/snowyeve.ஹதம்.

Wednesday, May 19, 2010
Sunday, February 28, 2010
யாரைத்தான் நம்புவதோ ?

மருந்துகளில் கூட போலிகள் என்னும்போது யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்று பாடத்தோன்றுகிறது. பேதைகளாக இருக்கும் வரையில் இப்படியே இருக்க வேண்டியதுதான். உடல்நலம் சரியில்லா விட்டால் எதையாவது விற்றாவது மருத்துவரைப் பார்த்து மருந்துகள் வாங்கி உடல் நலனை பேண விரும்புவார்கள். இந்நிலையில் போலி மருத்துவர்களும் போலி மருந்துகளும் மக்கள் உயிருக்கு ஆப்பு வைப்பது என்பது தொடரும் நிலையில் மக்கள் மருத்துவத்துறையின் மீது நம்பிக்கை வைப்பது குறைந்துவிடும். உடனடியாக செய்ய வேண்டியன:
* மார்வாடிகளின் ஆதிக்கத்தை குறைப்பது.
* ஆர். ஐ.எம். பி. போலி மருத்துவர்களை கைது செய்வது.
* நடைமுறை சாத்தியமில்லாத பழைய சட்டங்களை வீசிவிட்டு புது சட்டங்களை உருவாக்கி கடுமையாக நடைமுறை படுத்துவது.
* உண்மையாகவே மக்களின் நலனின் மீது அக்கறை செலுத்துவது.
* மெடிக்கல் இன்சூரன்ஸ் கட்டாயம் என்ற நிலைமையை உருவாக்குவது.
இதை செய்தாலே இது போன்ற பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
Tuesday, February 16, 2010
அனானா-சிறுகதை
கந்தசாமி பெரியவருக்கு தலைகால் புரியல. சென்னையில இருந்து மகன், மருமகள் பேரனோட ஒருமாதம் கோடை விடுமுறைக்காக கிராமத்துக்கு வந்து இருந்தாங்க. குதியா குதிச்சாரு. பேரன தூக்கிட்டு ஓடி ஓடி கொஞ்சினாறு. தங்கம் இங்க பாரு மாடு, இது ஆடு, அங்க பாரு வெல்லக்கட்டி அணில் ஓடுது, பசி தூக்கம் கூட அவருக்கு இல்ல. சிங்க குட்டி வாழைபழம் சாப்பிடுறியா, அவன் தலையை ஆட்டி வேணாம் சொல்லிட்டான்.
அவரு வீட்டுல எப்பவும் வாழைப்பழம் ஒரு தாராக கட்டி உள் அறையில தொங்கிகிட்டு இருக்கும். யாருக்கு வேணுமோ அவங்க பறிச்சு திங்க வேண்டியதுதான். ஊரிலிருந்து சொந்த பந்தமெல்லாம் இங்க வந்தா வாழைப்பழ நினைவோட தான் வருவாங்க. அவருக்கு பெரிய வாழைத்தோப்பு இருந்தது, வியாபாரம் பண்ணி நல்ல பேரு வாங்கி இருந்தாரு வாழைப்பழ தாத்தா என்று.
யாராச்சும் வாழைப்பழம் வேண்டாம் என்று சொன்னா தாத்தாவுக்கு கோபம் வந்திடும் . உடனே வாழைப்பழம் வேணாம் என்று சொல்லுகிற குரங்கு உண்டா என்று சொலவடைஎல்லாம் சொல்ல ஆரம்பிச்சிடுவாரு.
பேரனை கோயிலுக்கு தூக்கிட்டு போயி சாமி பாருடா தம்பி என்று கொஞ்சிக்கிட்ட்டே வாழைப்பழம் சாபிடுரியா தங்கம் என்று கேட்டார், மறுபடியும் குழந்தை தலையை ஆட்டி வேணாம் என்று சொல்லி விட்டான். தாத்தாவுக்கு வருத்த்தமா போயிட்டு. வீட்டுக்கு வந்து மனைவியிடம் பய வாழைப்பழ வேண்டாம் என்று சொல்லுகிறான், பழம் கூட திங்க கத்து குடுக்காம என்ன புள்ள வளர்த்து இருக்காங்க என்று திரியல என்று ஆதங்க பட்டார்.
மருமக கிட்டக்கேட்டார் என்னமா பையன் வாழைப்பழம் கூட திங்க மாட்டேன்கிறான், சாக்ளடே , பிஸ்கட் என்று குடுத்து குழந்தைய கெடுத்து வச்சிருக்கிங்க , என்று சொன்னார். இல்ல மாமா அவன் தினமும் இரண்டு பூவன் வாழைப்பழம் சாப்பிடுவானே என்று சொன்னாள். அப்படியா சரி என்று சொல்லிவிட்டு, வாசல் பக்கம் தூக்கிட்டு போயி கோழி மேயுறதை வேடிக்கை காட்டி கிட்டே மறுபடியும் கேட்டார் தங்கம் வாழைப்பழம் சாப்பிடுறியா. பேரன் வேணாம் என்று சொல்லி விட்டான். தாத்தா கோபமா மகன்கிட்ட போயி இங்க பாருடா இவன் ஒரு பழம் கூட திங்க மாட்டுறான். வளர்ற புள்ள பழம் திங்க வேண்டாமா என்று சத்தம் போட்டார். உடனே அவரு பையன் இல்லப்பா நான் தினமும் பழம் வாங்கிகிட்டு வந்து கொடுப்பேன் அவன் சாப்பிடுவானே என்று சொல்லிகிட்டே உள் அறைக்கு போயி ஒரு பழத்தை எடுத்து வந்து
தங்கம் இங்க பாரு, இது என்ன அப்படின்னு சொன்ன உடனே அவன் இஈ அனானா என்று கத்திக்கிட்டே பிடுங்கி சாப்பிட ஆரம்பிச்சிட்டான். தாத்தாவுக்கு இப்பதான் புரிஞ்சது வாழைப்பழம் கிடையாது அவன் பாசையில அது அனானா ( பனானா ) என்று........

முன்னோர் தந்த சொத்து - ஊதாரிகளிடம்
நீண்ட தலைமுறைகளை கண்ட நம் தமிழ் இனம் நமக்கு தந்த அறிவு மற்றும் அனுபவ சொத்துக்களை நாம் ஊதாரிகளை போல வீணடித்து விட்டோம்.தமிழர்களின் மூலிகைகள் சார்ந்த மருத்துவ அறிவு அபாரமானது. சுளுக்கு வழித்தல், குடல் ஏற்றம் சரி செய்தல், எலும்பு முறிவுக்கான புத்தூர் கட்டு போன்றவை என்றும் இருந்துகொண்டிருக்கும் எச்சங்கள். இன்னும் ஒரு சில தலைமுறைகள் தாண்டினால் இவையும் நம் வாழ்நாளில் தொலைத்து விடுவோம் என்றே தோன்றுகிறது.
Subscribe to:
Posts (Atom)