Tuesday, February 16, 2010

அனானா-சிறுகதை

கந்தசாமி பெரியவருக்கு தலைகால் புரியல. சென்னையில இருந்து மகன், மருமகள் பேரனோட ஒருமாதம் கோடை விடுமுறைக்காக கிராமத்துக்கு வந்து இருந்தாங்க. குதியா குதிச்சாரு. பேரன தூக்கிட்டு ஓடி ஓடி கொஞ்சினாறு. தங்கம் இங்க பாரு மாடு, இது ஆடு, அங்க பாரு வெல்லக்கட்டி அணில் ஓடுது, பசி தூக்கம் கூட அவருக்கு இல்ல. சிங்க குட்டி வாழைபழம் சாப்பிடுறியா, அவன் தலையை ஆட்டி வேணாம் சொல்லிட்டான்.
அவரு வீட்டுல எப்பவும் வாழைப்பழம் ஒரு தாராக கட்டி உள் அறையில தொங்கிகிட்டு இருக்கும். யாருக்கு வேணுமோ அவங்க பறிச்சு திங்க வேண்டியதுதான். ஊரிலிருந்து சொந்த பந்தமெல்லாம் இங்க வந்தா வாழைப்பழ நினைவோட தான் வருவாங்க. அவருக்கு பெரிய வாழைத்தோப்பு இருந்தது, வியாபாரம் பண்ணி நல்ல பேரு வாங்கி இருந்தாரு வாழைப்பழ தாத்தா என்று.
யாராச்சும் வாழைப்பழம் வேண்டாம் என்று சொன்னா தாத்தாவுக்கு கோபம் வந்திடும் . உடனே வாழைப்பழம் வேணாம் என்று சொல்லுகிற குரங்கு உண்டா என்று சொலவடைஎல்லாம் சொல்ல ஆரம்பிச்சிடுவாரு.
பேரனை கோயிலுக்கு தூக்கிட்டு போயி சாமி பாருடா தம்பி என்று கொஞ்சிக்கிட்ட்டே வாழைப்பழம் சாபிடுரியா தங்கம் என்று கேட்டார், மறுபடியும் குழந்தை தலையை ஆட்டி வேணாம் என்று சொல்லி விட்டான். தாத்தாவுக்கு வருத்த்தமா போயிட்டு. வீட்டுக்கு வந்து மனைவியிடம் பய வாழைப்பழ வேண்டாம் என்று சொல்லுகிறான், பழம் கூட திங்க கத்து குடுக்காம என்ன புள்ள வளர்த்து இருக்காங்க என்று திரியல என்று ஆதங்க பட்டார்.
மருமக கிட்டக்கேட்டார் என்னமா பையன் வாழைப்பழம் கூட திங்க மாட்டேன்கிறான், சாக்ளடே , பிஸ்கட் என்று குடுத்து குழந்தைய கெடுத்து வச்சிருக்கிங்க , என்று சொன்னார். இல்ல மாமா அவன் தினமும் இரண்டு பூவன் வாழைப்பழம் சாப்பிடுவானே என்று சொன்னாள். அப்படியா சரி என்று சொல்லிவிட்டு, வாசல் பக்கம் தூக்கிட்டு போயி கோழி மேயுறதை வேடிக்கை காட்டி கிட்டே மறுபடியும் கேட்டார் தங்கம் வாழைப்பழம் சாப்பிடுறியா. பேரன் வேணாம் என்று சொல்லி விட்டான். தாத்தா கோபமா மகன்கிட்ட போயி இங்க பாருடா இவன் ஒரு பழம் கூட திங்க மாட்டுறான். வளர்ற புள்ள பழம் திங்க வேண்டாமா என்று சத்தம் போட்டார். உடனே அவரு பையன் இல்லப்பா நான் தினமும் பழம் வாங்கிகிட்டு வந்து கொடுப்பேன் அவன் சாப்பிடுவானே என்று சொல்லிகிட்டே உள் அறைக்கு போயி ஒரு பழத்தை எடுத்து வந்து
தங்கம் இங்க பாரு, இது என்ன அப்படின்னு சொன்ன உடனே அவன் இஈ அனானா என்று கத்திக்கிட்டே பிடுங்கி சாப்பிட ஆரம்பிச்சிட்டான். தாத்தாவுக்கு இப்பதான் புரிஞ்சது வாழைப்பழம் கிடையாது அவன் பாசையில அது அனானா ( பனானா ) என்று........

1 comment:

Unknown said...

Romba Nalla Irrunthdu, Nandri