Saturday, November 14, 2009

ஒரு பார்வை ஒரு புன்னகை ஒரு வார்த்தை

திசையின்றி அலைந்தஎன்
சிந்தனைகளை சீற்படுத்தியதுன்
ஒரே பார்வை...

வெடிப்புற்று இருந்த என்
மனதில் நீர் ஊற்றியதுன்
ஒரே புன்னகை

ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு
அடிமையாக்கியது உன்
ஒரே வார்த்தை...

கடந்த காலமும் காதலும்

இன்னமும் இருக்கிறது
உன் பார்வைச் சூட்டில்
என் கருகிய இதயம்.

சுமக்க முடியவில்லை
இதயத்தில் வேதனை
உதடுகளில் புன்னகை.

மீண்டும் திரும்புமா
என் வீட்டு தோட்டத்தை
கடந்துவிட்ட தென்றல்...

தொலைபேசி

இடம், பொருள், ஏவல்
எதுவுமே தெரியாமல்,
அழைத்ததேனோ,
இனிய தொலைபேசியே..

விழலுக்கு இறைத்த நீர்

வற்றிப்ப் போயின என்
புரட்ச்சி எண்ணங்கள்
கள் ஈன்ற பனைமரமாய்
அரசியல்வாதியின் பதவியை
நிரப்பிய பின்...

மைவிழி

உன் மைவிழி வழி

என் மெய் நோக்கும் போது

என் கைப்பட்ட காகிதம்

கவிதையானது...

thamarai

நிலத்தாமரை உன் அழகில்
என் மனத்தடாகத்தில்
அவள் முகத்தாமரை.

Wednesday, September 2, 2009

பயணம் : கங்கை கொண்ட சோழபுரம்











ஒரு மழைக்கால மாலைப்பொழுதில் கங்கை கொண்ட சோழபுரம் சென்ற பொது எடுத்த புகைப்படங்களை அனைவரின் பார்வைக்கும் விருந்தாக்குகிறேன். பதினொன்றாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கற்கோயில். அவனது கண்கைபுரத்து வெற்றியை கொண்டாடும் வகையில் கட்டப்பட்ட கோயில். பின் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. மேலும் தவல்களுக்கு.... http://en.wikipedia.org/wiki/Gangaikonda_Cholapuram

Friday, August 21, 2009

உன் வெள்ளிக் கொலுசின்

ஜல் என்ற ஓசையில்

விழித்து எழுந்ததடி என் மனம்

புன்னகையை பொன்நகையாய் அணிந்தவளே

இவ்வணி சுமந்த உன் பாதச் சுவடுகள்

பதிந்தது தரையில் மட்டுமல்ல

என் இதயத்திலும்...

Thursday, August 20, 2009

அசைக்க முடியாதது

ஆடி விட்டது

இற்று வீழ்ந்தது

ஈன்று தலைக்கனம்

உலக வல்லரசில்

ஊழி போராட்டம்

எத்தனுக்கு எத்தன

ஏமாற்றி விட்டதில்
ஐயமானது ஐயாவின் படைபலம்

ஒப்பற்ற நாடு

ஓய்ந்து விடுமா

ஒவ்டதம் தேடி

அலைகிறது அமெரிக்கா.

குட்ட குட்ட குனிகிறேன்
குனிய குனிய குட்டினால்
என்னுள் எழுவான் ஒருவன்,
அவன் மறவன்.