நீண்ட நாட்களுக்கு பிறகு குயிலின் கீதத்தை கேட்டேன். வீட்டின் பின்புறம் அமர்ந்திருந்த போது மெல்லிசையாக ஒலிக்க ஆரம்பித்தது. வயல்களைஎல்லாம் அழித்து மனைகளாக்கி மாற்றி, மரங்களை எல்லாம் அழித்து பின்பு குயிலின் குரல் கேட்பது என்பது அதிசய நிகழ்வு ஆகிவிட்டது. " வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர்" என்பார் பாரதியார் குயில் பாட்டில். வெயில் நுழைய முடியாத அடர்த்தியான தோட்டங்கள் எல்லாம் அழிந்தபின் குயில் எங்கு நுழையும்.
தொடர்ந்து ரசிக்க முடியாவண்ணம் செய்ய வேண்டிய வேலைப்பளு நினைவை வந்து அழுத்த எழுந்து வர வேண்டியவனாகிவிட்டேன்.
ரசிக்க இயற்கை அழைத்தாலும் கடமை பணியாற்ற அழைக்கும் போது என் செய்வது stopping by woods in the snowy evening கவிதையை நினைத்துக் கொண்டேன். http://www.ketzle.com/frost/snowyeve.ஹதம்.
Monday, August 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment